உக்ரைனிய படைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து இரண்டாவது நகரம் ஒன்றில் இருந்தும் ரஷ்ய மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய முன்னேற்றமாக, உக்ரைனிய படைகள் ரஷ்ய நாட்டு பிராந்தியத்தின் உட்பகுதிக்குள் 30 கிலோமீட்டர் வரை உட்புகுந்து இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த தகவலை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இது 2022 முதல் இதுவரையிலான போர் நடவடிக்கையில் உக்ரைனின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் உக்ரைனின் ராணுவ தலைவர் Oleksandr Syrskyi வழங்கிய தகவலில், குர்ஸ்க் பகுதிக்கு உட்பட்ட 1000 சதுர கிலோமீட்டர் பரபரப்பு உக்ரைனிய படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் உக்ரைனிய படைகளின் முன்னேற்றத்தை தொடற்ந்து கிட்டத்தட்ட 11,000 மக்கள் Krasnoyaruzhsky நகரத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரி Andrey Miskov வழங்கிய தகவலில், வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்திகளில் அழைத்து செல்லப்பட்டு தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 500 குடிமக்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குள் தொடர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.