ரஷ்யாவில், வேகமாகச் சென்ற கார் ஒன்று, சாலை தடுப்பு ஒன்றில் மோதியுள்ளது. அது மோதிய வேகத்தில், காரின் கதவு திறந்து, காருக்குள்ளிருந்து தலையில்லாத ஒரு உடல் சாலையில் விழுந்துள்ளது. அப்போது, Yegor Komarov (23) என்ற நபரும், மேலும் இரண்டு ஆண்களும் காரிலிருந்து இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்கள்.
அந்த தலையில்லாத உடல், செயிண்ட் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த 50 வயதான தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமானது என பொலிசார் பொலிசார் நம்புகிறார்கள். இந்த மூவருக்கும் அந்த தொழிலதிபருக்கும் நடந்த வாக்குவாதத்தின்போது அவர் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை காட்டுக்குள் கொண்டு சென்று புதைக்க மற்ற மூவரும் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், விசாரணையில் கூடுதலாக ஒரு அதிர்ச்சியளிக்கும் விடயம் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட Yegor, தனக்கு கொலை செய்வதென்றால் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
அத்துடன், நரமாமிசத்தை ருசி பார்ப்பதற்காக, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள ஒரு பூங்காவில் வைத்து, ஒரு 38 வயது நபரை தான் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், அவரது மாமிசத்தையும் இரத்தத்தையும் தான் ருசி பார்த்ததாகவும், அவரது நாக்கை வெட்டி வெண்ணெயில் பொறித்து சாப்பிட்டுப் பார்த்ததாகவும், அது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த நபரின் உடலை கழிவு நீர் வடிகால் குழாய் ஒன்றில் போட்டுவிட்டதாக Yegor தெரிவித்துள்ளார்.
அவருக்கு பொலிசார் கைவிலங்கிட்டபோது, விலங்கை இறுக்கமாக அணிவிக்குமாறும், இல்லையென்றால், தான் அவற்றையும் கடித்துவிடுவேன் என்றும் கூறி பொலிசாரை அதிரவைத்துள்ளார் Yegor.