தொலைதூர அச்சுறுத்தல் என்று சீனாவை பல காலமாகக் கருதி வந்த நேட்டோ தற்போது முதல்முறை நேரடியாகக் குற்றம் சுமத்தி உள்ளது.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் தீவிர உதவியாளராக சீனா விளங்குகிறது என்று அமெரிக்கா தலைமையிலான அந்தத் தற்காப்புக் கூட்டணி தெரிவித்து உள்ளது.
அத்துடன், ரஷ்ய ராணுவத் திறனைப் புதுப்பிக்க ஆயுதங்கள், ஆயுத பாகங்கள் ஆகியவற்றை சீனா அனுப்புவதையும் ரஷ்யாவுக்கு அது தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்றும் நேட்டோ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரகடனம் ஒன்று இடம்பெற்று உள்ளது.நட்பு நாடுகளைச் சேர்ந்த 32 தலைவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து உள்ளனர்.வெள்ளை மாளிகையில் ஜூலை 10ஆம் திகதி இரவு விருந்தில் பங்கேற்கச் செல்லும் முன்னர் அவர்கள் அந்த ஒப்புதலை அளித்தனர்.
ஏற்படக்கூடும் என்ற மறைமுக அச்சுறுத்தலைத் தாங்கி உள்ளது.இருப்பினும், எந்த மாதிரியான பின்விளைவுகள் என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
சீனா அதன் நலன்களுக்கும் நற்பெருக்கும் எதிரான விளைவுகளை சந்திக்காமல் ஐரோப்பாவில் அண்மைய காலத்தில் பெரியதொரு போரை ஏற்படுத்த இயலாது என்று பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் தற்காப்புத் தொழிற்தளத்துக்கு சீனா அளித்து வரும் ஆதரவு மிகப்பெரியது என்று அது கூறியுள்ளது.