நீண்டு செல்லும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக அமெரிக்கா தடைகளை விதிக்குமென, அமெரிக்க பிரதி நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ரஷ்யாவுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கும் நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என அத்தனை தரப்பினருக்கும் எதிராக தடைகளை விதிக்கும் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.