ரஷ்யாவுக்கு எதிராக உலக தலைவர்களை ஒன்றிணைக்கும் பைடன்!

You are currently viewing ரஷ்யாவுக்கு எதிராக உலக தலைவர்களை ஒன்றிணைக்கும் பைடன்!

ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதை உலக தலைவர்கள் ஒத்துக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

இந்த தடைகள் ரஷ்யாவிற்கு அதன் பொருளாதார நடைமுறைகளில் பெரும் பின்னடைவை கொடுத்து அந்த நாட்டின் நாணய மதிப்பை வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்திக்க செய்துள்ளது.

இந்தநிலையில் ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பாக உலக தலைவர்களுடன் பேசி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட தகவலில், இன்று அதிகாலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் சான்சள்ளோர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருடன் ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது தொடர்பாக பேசியதாகவும் அதற்கு அவர்களும் உறுதி அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளை செய்வதையும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply