ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கியதா? – அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம்!

You are currently viewing ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கியதா? – அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம்!

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக சீனா ஆயுதங்களை வழங்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் முன்னணி நாடுகள் பலவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா முதன்மையான பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது.

இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா பிரச்சனை மற்றும் தைவான் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான பதற்றம் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சமீபத்தில் இரு நாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகளும் சந்தித்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் எந்தவொரு ஆயுதங்களையும் சீனா ரஷ்யாவுக்கு இதுவரை வழங்கவில்லை என்றும், இனியும் வழங்காது என்றும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply