ரஷ்யாவுடன் ரகசியமாக கைகோர்த்த ஈரான்!

You are currently viewing ரஷ்யாவுடன் ரகசியமாக கைகோர்த்த ஈரான்!

ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் வெளி உலகிற்கு தெரியாத வகையில், ரகசியமான முறையில் ராணுவ கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த, தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யா மற்றும் ஈரானின் ரகசிய ராணுவ செயல்பாடுகளை பற்றி கூறியுள்ளார்.

இரு நாடுகளும், ஆயுத பரிமாற்றங்கள் மற்றும் ராணுவ துறை சார்ந்த தொழில் நுட்ப தகவல்களை பரிமாறி கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் ரஷ்யா உக்ரைன் மக்களை கொன்று குவிப்பதற்கும், ஈரானின் எதிரிகளை அழித்தொழிப்பதற்கும் இரு நாடுகள் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஈரான் இடையே நடக்கும் ராணுவ செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. ஈரான் ஏற்கனவே ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை வழங்கியது, இதனை தொடர்ந்து தற்போது ட்ரோன்களை வழங்கி உள்ளது’ வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை ஈரான் ரஷ்யாவிற்கு 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளது. இந்த UAVகளை ரஷ்யாவிற்கு வழங்குவதன் மூலம், ஈரான் உக்ரைனில் ரஷ்யாவின் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போரை நேரடியாக செயல்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவு, மத்திய கிழக்கில் உள்ள பிராந்தியத்திற்கும், சர்வதேச நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவும் ஈரானும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அனுமதியின்றி ஈரானிலிருந்து ரஷ்யாவிற்கு ட்ரோன்களை மாற்றுவதில் பங்கேற்பதன் மூலம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் தங்கள் கடமைகளை தொடர்ந்து மீறுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments