ரஷ்யாவும் ஈரானும் கூட்டு இராணுவ ஒப்பந்தம்!

You are currently viewing ரஷ்யாவும் ஈரானும் கூட்டு இராணுவ ஒப்பந்தம்!

ரஷ்யாவும் ஈரானும் வரலாற்றில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ராணுவம் பொருளாதார அணு அணு உலை டெக்னாலஜி சைபர் செக்கியூரிட்டி இரு நாடுகளின் எல்லை ஊடாக போக்குவரத்து வங்கி சேவை என அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இனிமேல் ரஷ்யாவிற்கு ஈரானுக்கோ எந்த ஒரு நாட்டிடமிருந்தாவது போர் அச்சுறுத்தல் வந்தால் இரு நாடுகளும் தங்களது ராணுவ வளங்களை ஒருசேர உபயோகிக்கும் 20 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளன. இதன் மூலம் இவர்களில் ராணுவ கூட்டணி என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.. சில நாட்களுக்கு முன்பாகவே இந்த ஒப்பந்தம் மேற்கத்திய ஊடகங்களில் மிக முக்கிய ஒப்பந்தமாக பார்க்கப்பட்ட சூழ்நிலையில் மேற்கத்திய மற்றும் அமெரிக்காவால் இதை தடுக்க முடியாது என்பதால் எளிதாக இது இன்று ரஷ்ய அதிபர் புத்தி மற்றும் ஈரான் அதிபர் பெஸஷ்கியான் தலைமையில் கையெழுத்திடப்பட்டுள்ளது

இத்தனை ஆண்டுகள் இதே போன்ற வெளிப்படையான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ரஷ்யா தற்பொழுது வடகொரியா சீனா ஈரான் என பல நாடுகளுடன் நேட்டோவை போன்ற ஒரு ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறது அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது மத்திய கிழக்கு மிக முக்கிய இராணுவ வளம் கொண்ட நாடான ஈரானுடன் ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தம்.. இனிமேல் இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு பொதுவான ராணுவ ஒப்பந்தத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக மாறி உள்ளது

இனி ரஷ்யாவின் அதிநவீன ஆயுதங்களும் ஈரானின் அதிநவீன ஆயுதங்களும் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் தங்களது நட்பு நாட்டை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட போகிறது என்பதே எதார்த்தமான உண்மை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்கனவே மாபெரும் சவக்குழியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு இது ஒரு பேரடியாக மாறி உள்ளது ..

பகிர்ந்துகொள்ள

Leave a Reply