ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புதிய இராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஈரானின் படைகள் உக்ரேனில் உள்ள அணு நிலையங்கள் மற்றும் பல முக்கிய இடங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு உதவியதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டு வைத்து வருகிறது.
அத்துடன் சில நாட்களுக்கு முன்பு ஈரானிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதில் இருந்து ஈரான் அமெரிக்கா இடையிலான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
இந்த ட்ரோன்கள் விற்பனையில் ஈடுபட்ட ஈரானிய நிறுவனங்களுக்கு பைடன் தலைமையிலான அரசு பொருளாதார தடை போன்ற அழுத்தங்களை கொடுத்து வந்தது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ரஷ்யா மீண்டும் ஈரானுக்கும் ட்ரான்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவம் சார்ந்த ஆயுதங்கள் வழங்குவது குறித்த புதிய இராணுவ ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் ஈரானுக்கு முன்பில்லாத அளவிற்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை செய்து வருகிறது.
இதனால் ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேலும் பலமடைந்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நகர்வு குறித்து தெளிவாக இருக்க வேண்டும் ஏன் என்றால் இதனால் உக்ரைன் மட்டுமல்லாமல் ஈரானை சுற்றியுள்ள நாடுகளுக்கும் பெரும் ஆபத்து என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினருக்கும் ஆதரவும் மற்றும் எதிர்ப்புகள் தொடர்ச்சியாக உலக நாடுகளின் மத்தியில் வந்துகொண்டு இருக்கிறது.
ரஷ்யா ஈரானுடன் இவ்வாறு இணைந்து செயல்படுவது அதன் ஆயுதங்கள் மேம்பாடு, வர்த்தகம் போன்ற துறைகளில் உதவும் அதே நேரம் ரஷ்யா அதன் பிரத்யேக ராணுவ ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை ஈரானுக்கு கொடுப்பது குறித்தே எங்களது கவலை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்ற செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் மீதான நம்பிக்கை முற்றிலுமாக போய்விட்டதாகவும் உக்ரேன்-ரஷ்யா போரை தங்கள் ஆதிக்கத்தை வைத்து மேற்கத்திய நாடுகள் ஆதாயம் தேடிக் கொள்கிறது என்றும் ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) கூறியுள்ளார்.