ரஷ்யா-ஆப்கானிஸ்தான் இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து!

You are currently viewing ரஷ்யா-ஆப்கானிஸ்தான் இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து!

ஆப்கானிஸ்தான் திராட்சை, உலர்ந்த பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கு மாற்றாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்க ஆப்கானிஸ்தான் முன்வந்துள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதை அடுத்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தனர்.

இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா தங்களது நட்பு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு சலுகைகளை வழங்கியது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து 1 மில்லியன் பேரல் பீப்பாய் எண்ணெய்களை வாங்க ஆப்கானிஸ்தான் சமீபத்தில் விருப்பம் தெரிவித்தது இருந்தது.

அந்தவகையில் தற்போது திராட்சை, உலர்ந்த பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கு ஈடாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பொருட்களை பண்டமாற்று முறையில் வாங்குவதற்கு ஆப்கானிஸ்தான் முன்வந்ததுள்ளது.

இதுத் தொடர்பான தகவலை தாலிபான்கள் அரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தலைவர் நூரிதீன் அஸிஸி தெரிவித்துள்ளார்.

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments