போலந்து வரலாற்றில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை ஆயுதப்படை தினமான ஆகஸ்ட் 15ம் திகதி அந்த நாட்டு அரசாங்கம் நடத்தியுள்ளது. சமீபத்தில் போலந்து நாட்டின் எல்லைக்கு அருகே அண்டை நாடான பெலாரஸ் மிகப்பெரிய அளவில் ராணுவத்தை குவித்ததுடன், அங்கு இராணுவ பயிற்சியையும் மேற்கொண்டது.
இதனால் போலந்தில் பதற்றம் அதிகரித்ததுடன் எல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையும் போலந்துக்கு பெரும் தலைவலியாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் போலந்து தன்னுடைய ஆயுதப்படை தினமான ஆகஸ்ட் 15ம் திகதி தனது வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான இராணுவ அணிவகுப்பு பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் 200 இராணுவ வாகனங்கள், 92 இராணுவ விமானங்கள், HIMARS லாஞ்சர்கள், K2 டாங்கிகள், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள், Bayraktar TB2, போர்சுக் போர் ட்ரோன்கள், மற்றும் M1A1 ஆப்ராம்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன.
அத்துடன் இதில் அமெரிக்கா, பிரித்தானியா, குரோஷியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.