ரஷ்யா– புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விளாடிமிர் புடினுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக உள்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
100 நாட்கள்
நூறு நாட்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான உக்ரேனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், அங்கு போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உலக நாடுகள்
இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யா உலக நாடுகளின் கோரிக்கையை நிராகரித்து, உக்ரைன் மீதான போரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
புற்றுநோய்
இதன் காரணமாகவே ரஷியா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது, இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அறுவை சிகிச்சை
69 வயதாகும் புதினுக்கு வந்திருக்கக் கூடிய புற்றுநோய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதற்காக விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டது.
சிறப்பு கவுன்செல்
இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்றும், புதினுக்கு ஏதாவது ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்கவும் ரஷ்யாவை நிர்வகிக்கவும் சிறப்பு கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.
மருத்துவ உதவி
இந்நிலையில், விளாடிமிர் புதினுக்கு தற்போது அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக அந்நாட்டு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் பொது இடங்களில் புதின் செல்ல வேண்டாம் என்றும், பொது மக்களிடத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகளில் புதின் கலந்து கொள்ள கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல் பாதிப்பு
இதனால் இந்த மாதத்தில் புதின் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ராணுவ பிரதிநிதிகளுடன் கலந்து கொண்ட ஆலோசனையின் போது, புதினுக்கு உடல் பாதிப்பு உணரப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை
அதே நேத்தில் புதின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அவரது நிகழ்ச்சிகள் ஒகஸ்ட் மாதத்தில் வைத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்த
இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன நடக்க போகிறது என்று உலக நாடுகள் தற்போது பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.