ரஷ்ய எல்லையை கடந்து சென்று உக்ரைனின் துணை ராணுவ படை சண்டையிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 580 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகள் நிலப்பரப்புகளை புதிதாக கைப்பற்றியும், மீட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆட்சியையும், அதன் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் ரஷ்யர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் “Freedom of Russia Legion” என்ற உக்ரைனிய துணை ராணுவ படை ரஷ்ய எல்லையை கடந்து சண்டையிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த சண்டையானது ரஷ்ய பிராந்தியமான பெல்கோரோட் பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் நாடாளுமன்ற எம்.பி யூரி மிசியாகினின் டெலிகிராம் பக்கத்தில் வெளியான அறிக்கையில், உக்ரைனின் துணை ராணுவப்படை ரஷ்ய எல்லையை கடந்து பெல்கோரோட் பகுதியில் தாக்குதல் நடவடிக்கையை செய்து வருகிறது.
இதில் எந்தவொரு உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படவில்லை, மேலும் திட்டமிட்டபடி வேலை நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.