ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக வடகொரியாவுக்கு பயணம்!

You are currently viewing ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக வடகொரியாவுக்கு பயணம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக வடகொரியாவுக்கு பயணப்பட திட்டமிட்டுள்ளதுடன், ஆயுத உதவி கோரவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000 ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு பயணப்பட இருக்கிறார். வடகொரியாவின் கிம்ஜோங் உன் உடன் நேரிடையான பேச்சுவார்த்தைக்கும் புடின் தரப்பு தயாராகி வருகிறது.

மேற்கத்திய நாடுகளின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த உறுதிமொழி எடுத்துள்ளது.

முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய பெரும் பரிவாரங்களுடன் புடின் செவ்வாய்கிழமை வடகொரியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் ஆயுதங்கள் தொடர்பில் முடிவெடுக்க ராணுவ அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

உக்ரைன் மீதான போருக்கு பின்னர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு எதிராக கைதாணை பிறப்பித்துள்ள நிலையில், நேச நாடுகளுக்கும் பயணப்படுவதை அவர் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆனால் தற்போது வடகொரியா போன்ற நாட்டுக்கு பயணப்பட புடின் முடிவு செய்துள்ளதை அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு தேவையான சோவியத் கால ஆயுதங்களை வடகொரியா விநியோகித்து வருகிறது.

மட்டுமின்றி உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் மின்னணு உபகரணங்களை ரஷ்யாவுக்கு வடகொரியா வழங்கியுள்ளது. பதிலுக்கு பொருளாதார உதவி, ராஜாங்க ஆதரவு, ஆயுதங்கள் என வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments