உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்நிலையில், போரில் எத்தனை ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், போரால் உக்ரைனில் இருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். ரஷிய தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, போரில் ரஷிய வீரர்கள் 21 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துளனர். ராணுவ இழப்பை பொறுத்தவரை 2 ஆயிரத்து 162 ராணுவ வாகனங்கள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள், 83 டாங்கிகள், 1,523 இதர வாகனங்களை ரஷியா இழந்துள்ளது. போர் கப்பல், ஏவுகணைகள் அமைப்பு உள்ளிட்ட ராணுவ தளவாடங்களையும் ரஷியா இழந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனாலும் இது ஒருதரப்பால் பரப்பப்படும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.