ரஷ்ய – துருக்கிய அதிபர்கள் சந்திப்பு! ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன!!

You are currently viewing ரஷ்ய – துருக்கிய அதிபர்கள் சந்திப்பு! ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன!!

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் துருக்கிய அதிபர் எட்ரோகன் ஆகியோருக்கிடையிலான நேரடி சந்திப்பு நடைபெற்றுள்ளது. பரபரப்பான உக்ரைன் விவகாரங்களுக்கு மத்தியில், “நேட்டோ” வால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்ய அதிபரும், “நேட்டோ” வின் பிரதான அங்கத்துவ நாடான துருக்கியின் அதிபரும் நேரிடையாக சந்தித்துக்கொண்டுள்ளதோடு, சில ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளமை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில், ரஷ்யாவிலிருந்து துருக்கி கொள்வனவு செய்யும் எரிவாயுவிற்கான கட்டணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ரஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்துவதற்கான இணக்கப்பாடு உட்பட, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டடத்துறை தொடர்பான விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும் ஒப்பந்தங்களும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக, ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான “TASS” தெரிவித்திருப்பதாக, “Reuters” செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ரஷ்ய நாணயமான “ரூபிள்”, மீண்டும் சர்வதேச அளவில் உயர்ச்சியடையக்கூடாது என்பதால், ரஷ்யாவுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் ரூபிளில் செலுத்தப்படக்கூடாதென “நேட்டோ” வும், அமெரிக்காவும், மேற்குலகமும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீறி, ரஷ்ய எரிவாயுவிற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிளில் செலுத்துவதற்கும், ரஷ்யாவுடன் தொடர்புகளை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்ற “நேட்டோ” வினதும், அமெரிக்காவினதும், மேற்குலகத்தினதும் உத்தரவுகளையும் மீறும் விதத்தில் “நேட்டோ” வின் பிரதான உறுப்பு நாடான துருக்கி ரஷ்யாவுடனான தொடர்புகளில் நெருக்கமாவதும் விசனங்களை கிளப்புமென எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply