ரஷ்ய படைகள் மற்றும் சிரிய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு சிரிய கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். தாக்குதலை தொடங்கிய 3 நாட்களிலேயே ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படை அலெப்போ நகருக்குள் நுழைந்து பெரும்பாலான பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனை சிரிய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், சிரிய கிளர்ச்சியாளர்களிடம் முழுமையான கட்டுப்பாட்டை வழங்க விடாமல் ரஷ்யா மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் தொடங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனால் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பை குறைத்துள்ள நிலையில், ஜனாதிபதி அசாத்திற்கு சார்பான ஊடகங்கள் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான பதற்றத்தை புகாரளித்து வருகின்றனர்.
சிரிய ராணுவம் தொடர்ந்து பின்வாங்கி வருதால் சிரிய கிளர்ச்சியாளர்கள் படைகள் ஹமாவிற்குள் நுழைந்து இருப்பதுடன் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் முன்னேறியுள்ளனர்.