கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ஸ குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளே நாட்டின் இன்றைய நிலைமைக்கு காரணம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனவே தன்னையும் அவர்களைப் போல முட்டாள் என அடையாளப்படுத்துவது தனக்கு பிடிக்கவில்லை என்றார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை இந்த வருடத்துக்குள் தீர்க்கப்படுமா ?என ஊடகமொன்று வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் ராஜபக்ஸ குடும்பத்தினர் நாட்டு மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கியதை நம்பி, பெரும்பாலான மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.
எனவே ராஜபக்ஸ குடும்பத்தினரைப் போன்று பொய் வாக்குறுதிகளை வழங்க தான் தயாரில்லை. இந்த பொருளாதார நெருக்கடி இந்த வருடம் முடிந்து விடும் என கனவிலும் நினைக்க கூடாது.
இந்த நெருக்கடியிலிருந்து மீள குறைந்த ஒன்றரை வருடங்கள் சரி செல்லும் என தான் நம்புகிறேன் என்றார்.
இந்த பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதிலிருந்து தான் உண்மையை மாத்திரமே நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.