ராணியாரின் மறைவை கேவலப்படுத்திய ஸ்கொட்லாந்து பெண்!

You are currently viewing ராணியாரின் மறைவை கேவலப்படுத்திய ஸ்கொட்லாந்து பெண்!

ஸ்கொட்லாந்தில் மீன் மற்றும் சிப்ஸ் கடை உரிமையாளர் ஒருவர் ராணியாரின் இறப்பை ஷாம்பெயின் தெளித்து கடைகு வெளியே நடனமாடி கொண்டாடிய சம்பவத்தில் பிரித்தானியர்கள் கோபத்தை காட்டியுள்ளனர். அந்த கடையின் ஜன்னல்களை நொறுக்கியதுடன், முட்டை வீச்சும் நடத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்து நாட்டவரான Jacki Pickett என்ற அந்த பெண்மணி அரச குடும்ப எதிர்ப்பாளர் என கூறப்படுகிறது.

ராணியார் காலமான தகவலால் தேசம் மொத்தம் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், Jacki Pickett தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பதாகை ஒன்றை ஏந்தியபடி இவரே நின்றுள்ளார். அந்த பதாகையில் Lizard Liz Dead என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. குறித்த காணொளி சமூக ஊடகத்தில் தீயாக பரவவே, கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் Jacki Pickett-ன் மீன் மற்றும் சிப்ஸ் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், பெரும்பாடுபட்டு, மக்களை அமைத்திப்படுத்தியதுடன், கடையை மூட வைத்து, குறித்த பெண்மணியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் மக்கள் சமூக ஊடகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மட்டுமின்றி, அவரை அந்த நகரை விட்டே வெளியேற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்க இருப்பதாகவும் உறுதி செய்துள்ளனர்.

சமூக ஊடக பக்கத்தில் ஒருவர் குறிப்பிடுகையில், எங்கள் ராணியாரின் இறப்பை கொண்டாடும் அளவுக்கு துணிச்சலா? மனித குலத்திற்கே அவமானம் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply