ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.
ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையை சேர்ந்த ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது.
இதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல வருடங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் இருந்து ஹாடி வேண்டுகோளுக்கு ஏற்ப சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.