ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

You are currently viewing ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர் மரணித்த சம்பவத்தை அடுத்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இறந்த கடற்றொழிலாளர் மலைசாமியின் குடும்பத்தினருடன் இணைந்து, ராமேஸ்வரம் அரச மருத்துவமனை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கடற்பரப்பில் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்த செய்தி, பரவியதையடுத்து, ராமேஸ்வரம் மற்றும் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தின் பிற பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை, அமைதியற்ற சூழ்நிலை நிலவியது

இதற்கிடையில் குறித்த சம்பவத்தின்போது காணாமல்போனதாக கூறப்பட்டுள்ள ராமச்சந்திரன் என்ற கடற்றொழிலாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 83 இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments