ருமேனிய விமானநிலையத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைவிடப்பட்டுள்ள இலங்கைதொழிலாளர்கள் நிர்க்கதியான நிலையில் இலங்கை திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.
ருமேனியாவின் பொட்டசொனி என்ற பகுதியில் உள்ள ஒட்டபெனி விமானநிலையத்தில் 36 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.
இலங்கைக்கு அனுப்புவோம் என வாக்குறுதியளித்து அதிகாரிகள் அவர்களை விமானநிலையத்திற்கு நேற்று கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் விமானங்கள் எதுவும் இல்லாததன் காரணமாக அவர்கள் கைவிடப்பட்டுள்ளனர் என பல ருமேனிய செய்திச்சேவைகள் தெரிவித்துள்ளன.
இலங்கையர்களை சேர்ந்தவர்களை மூன்றுவார தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்திய பின்னரே அதிகாரிகள் அவர்களை நாட்டிற்கு திருப்பிஅனுப்ப முயன்றுள்ளனர்.
உணவு குடிநீர் இல்லாத நிலையில் அவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் தொழிற்சாலை முதலாளிகளால் அனுப்பப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இலங்கையர்கள் 43 பேர் தாக்கப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.