ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
1994 ஆம் ஆண்டு டுட்ஸி இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக ருவாண்டாவின் முன்னாள் மகப்பேறு மருத்துவர் சோஸ்தென் முனியேமனா (Sosthene Munyemana) 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இனப்படுகொலை நடந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது.
68 வயதான சோஸ்தென் முனியேமனா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஒரு இனப்படுகொலைக்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்.
தீர்ப்பு வரும் வரையில் முனியேமனா சிறையில் தடுத்து வைக்கப்படவில்லை. நடந்து முடிந்து விசாரணை வரைக்கும் அவர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக இருந்தார்.
இனப்படுகொலை நடத்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் பிரான்ஸ் சென்று வசித்து வந்தார். இது மக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியது.
விசாரணைகளின் போது மருத்துவர் முனியேமனா நான் எந்த தவறும் செய்வில்லை என்று குற்றத்தை மறுத்துள்ளார்.
இனப்படுகொலை நடத்திய ருவாண்டாவின் இடைகால அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜீன் கம்பண்டாவின் (ean Kambanda) நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.
இந்த இனப்படுகொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரே ஒரு தலைவர் கம்பண்டா மட்டுமே.
100 நாட்களுக்குள் 8 இலட்சம் சிறுபாண்மை டுட்ஸிகளையும் பிற இனக்குழுகளையும் ஆயுதம் ஏந்திய போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.