இன்று (31.08.23 வியாழக்கிழமை) பிரித்தானியா Wallington Green இலிருந்து ஜெனிவா நோக்கித் தொடங்கப்பட்ட
மிதியுந்துப் பயணம் எழுச்சியோடு நடைபெற்று இலக்கம் 10, Downing Street பிரதமர் இல்லத்தில் நிறைவடைந்தது. இப்போராட்டப்பயணமானது நாளை (01.09.23 வெள்ளிக்கிழமை) கொலண்ட் குற்றவியல் நீதிமன்றம் சென்று பல உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் அரச மட்டச் சந்திப்புக்களில் இணைந்து கொண்டு தமிழின அழிப்பிற்கான நீதியையும் விடுதலையையும் வலியுறுத்தியவாறு ஐ.நா மன்ற செயலகத் திடலில் 18.09.23 திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேரணியுடன் இணைந்து இப்போராட்டப்பயணமானது நிறைவடையவுள்ளது.
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்
TCC-UK