லண்டனில் கத்தியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் மீது பாய்ந்த இலங்கையர்!

You are currently viewing லண்டனில் கத்தியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் மீது பாய்ந்த இலங்கையர்!

பிரித்தானியாவில் கத்தியுடன் குதிரை காவலர் அணிவகுப்பின் நடுவே பாய்ந்த இலங்கையர், கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்த முயற்சித்ததில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் கத்தியுடன் அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளதை ஒப்புக்கொண்ட நிலையில், நாளை அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, நீதிமன்ற விசாரணையின் போது தாம் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என கத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

30 வயதான பிரசாந்த் கந்தையா கடந்த ஆண்டு ஈஸ்டர் திங்கட்கிழமை, ஏப்ரல் 18ம் திகதி கத்தியுடன் குதிரை காவலர் அணிவகுப்பின் நடுவே பாய்ந்த நிலையில், சுட்டுக்கொல்லப்படுவதற்கும் சில நொடிகள் இடைவெளியில் தப்பினார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் எலி விஷத்தால் ஜனங்களை கொல்வது எப்படி என இணையத்தில் தகவல் திரட்டியுள்ளார். அத்துடன், நான் பிரித்தானியாவை வெறுக்கிறேன் எனவும் பொலிசார் தொடர்பிலும் இணையத்தில் தகவல் திரட்டியுள்ளார்.

மட்டுமின்றி, 2019ல் நடந்த லண்டன் பாலம் தீவிரவாத தாக்குதல் தொடர்பிலும் தரவுகளை பார்வையிட்டுள்ளார். ஆனால் தாம் அதிகாரிகளால் கொல்லப்பட முயன்றதாகவும், யாருக்கும் தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை என்றும் கந்தையா விசாரணையின் போது கூறியுள்ளார்.

மட்டுமின்றி, சம்பவத்தன்று தமது பிள்ளைகள் ஒருவக்கு அனுப்பிய அலைபேசி குறுந்தகவலில், சென்று வருகிறேன், அன்புடன் அப்பா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குதிரை காவலர் அணிவகுப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் ரவீந்தர் திக்பால் மற்றும் ரியான் பாரிசோ ஆகியோர் மீதே கந்தையா கத்தியுடன் பாய்ந்துள்ளார். சமையலறை கத்தியை பயன்படுத்தியதும், தாக்குதலுக்கு தயாராக காத்திருந்ததும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply