லண்டனில் கொள்ளை முயற்சியை தனி ஒரு நபராக தடுத்து நிறுத்திய பெண்!

You are currently viewing லண்டனில் கொள்ளை முயற்சியை தனி ஒரு நபராக தடுத்து நிறுத்திய பெண்!

பிரித்தானியாவில் பிற்பகலில் கன்வீனியன்ஸ் ஸ்டோரில் நடைபெற்ற கொள்ளை முயற்சியை பெண் வாடிக்கையாளர் ஒருவர் தடுத்து நிறுத்திய சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கிழக்கு லண்டனில் உள்ள கன்வீனியன்ஸ் ஸ்டோர் ஒன்றில் ஜனவரி 20ம் திகதி அன்று பிற்பகலில் கொள்ளை முயற்சி ஒன்று அரங்கேறியது, ஆனால் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் தைரியமான தடுப்பு நடவடிக்கையால் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடையின் உரிமையாளரான ஜெய்மின் ராணா தெரிவித்த தகவலில், ஜனவரி 20ம் திகதி அன்று பிற்பகல் 2 மணியளவில் தனது தாயார் கவுண்டருக்கு பின்னால் வேலை செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கடைக்கு உள்ளே வந்து ஆயுதத்தை காட்டி மிரட்டினார்.

இதனை அருகில் இருந்து பார்த்து கொண்டு இருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர், மர்ம நபரை கடையை விட்டு வெளியே போகச் சொல்லி தள்ளினார், இதற்கிடையில் என்னுடைய அம்மா பீதியில் அலாரத்தை அழுத்தினார்.

அந்த தைரியமான பெண் வாடிக்கையாளர் கொள்ளையனை எதையும் எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினார், அதில் தரையில் தள்ளப்பட்ட பெண் வாடிக்கையாளருக்கு முதுகு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது என்று உரிமையாளர் ராணா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூழ்நிலைகள் பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன” என்றும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் மற்றும் தைரியமான பெண் வாடிக்கையாளரின் செயல் ஆகியவை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply