லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரையிலான தூரத்தை கடக்க விமான பயண நேரம் சராசரியாக 6 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும்.
இந்த நிலையில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 747 ரக பயணிகள் விமானம் இந்த தூரத்தை 5 மணி நேரத்துக்குள்ளாக கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த விமானம், நேற்று முன்தினம் காலை லண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிநேரம் 56 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தது.
இதன்மூலம் அட்லான்டிக் பயண தூரப்பகுதியை 5 மணிநேரத்துக்குள் கடந்த முதல் பயணிகள் விமானம் எனும் சாதனையை படைத்தது. முன்னதாக நார்வே விமானம் இந்த பயண தூரத்தை 5 மணிநேரம் 13 நிமிடங்களில் கடந்தது சாதனையாக இருந்தது.