லெபனானில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்  ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ள இஸ்ரேல் ராணுவம்!

You are currently viewing லெபனானில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்  ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ள இஸ்ரேல் ராணுவம்!

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி வரும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி தொடர்பான நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் நிதியை பதுக்கி வைத்திருந்த ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த பதுங்கு குழியில் பணம், தங்கம் என மொத்தமாக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்  அளவிற்கு நிதி இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள பதுங்கு குழியில் தாக்குதல் நடத்தவில்லை. இது ஹசன் நசர்ல்லாவின் பதுங்கு குழியாகும். இது பெய்ரூட்டின் இதயம் எனக் சொல்லக்கூடிய முக்கியமான அல்-சஹல் மருத்துவமனையின் நேர் கீழாக உள்ளது. லெபனான் மறுகட்டமைப்பிற்காக இந்த பணம் உதலாம் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply