லெபனானுக்கு ஆதரவாக வளைகுடா வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு!

You are currently viewing லெபனானுக்கு ஆதரவாக வளைகுடா வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு!

மிக நெருக்கடியான கட்டத்தில் லெபனானுக்கு ஆதரவளிப்பதாக வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. கத்தாரின் தோஹா நகரில் முன்னெடுக்கப்பட்ட அசாதாரண அமைச்சர் கூட்டம் ஒன்றில் இந்த முடிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் சமீபத்திய மாற்றம் தொடர்பில் விவாதிக்கவே, வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளது. லெபனான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் மோதல்கள் அதிகரித்து வருவதை கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

மேலும், அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் வன்முறையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஓராண்டாக நடந்துவரும் மோதலில் லெபனானில் இதுவரை 1,900 பேர்கள் கொல்லப்பட்டதுடன் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,000 கடந்துள்ளது.

பெரும்பாலான இறப்புகள் கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,000 கடந்துள்ளது.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர்கள் கொல்லப்பட, பதிலுக்கு இஸ்ரேல் நிர்வாகம் போர் பிரகடனம் செய்தது. மட்டுமின்றி, கடந்த 2 மாதங்களில் சிரியா, லெபனான், ஈரான் உட்பட பல நாடுகளில் இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments