வங்களாதேசத்தில் ஊரடங்கை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கம்!

You are currently viewing வங்களாதேசத்தில் ஊரடங்கை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கம்!

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மற்றும் டாக்காவை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவர் என்று தெரிகிறது.

இதன் காரணமாக மீண்டும்  வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், வங்காளதேசத்தில் நாடு முழுக்க இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய சேவைகள் முடங்கியதால் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது.

முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில், பங்கேற்ற வங்காளதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments