தென்னிலங்கையில் ஊழலினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் சிறீலங்கா ஜனாதிபதி வடக்கு – கிழக்கிலும் அதனை தொடர்ந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்த்து மற்றைய அனைத்து கட்சியினரும் சிறைக்கு செல்வார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தலின் பின்னர் சிறீலங்கா ஜனாதிபதி தரப்புக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்குமோ என்பது கேள்விக்குறி. அந்த பெரும்பான்மையினை எடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களைத்தான் தேடவேண்டும்.
அதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் பேரம்பேசுவது கடினமான விடயம் அவ்வாறு இருந்தால் தமிழர்களின் உரிமைசார்ந்த விடையங்களில் விட்டுக்கொடுப்புக்களை அவர்கள் செய்யவேண்டி வரும்.
அதனை தவிர்த்து ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை எடுப்பதாக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்த மற்றவர்கள் வெல்லவேண்டும்.
அவர்கள் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெரும்பான்மை எடுக்கும் வாய்ப்பு உள்ளன.
கொள்கையளவில் அவர் சொல்லியுள்ளார் தமிழ்தரப்புக்கள் தேர்தலின் பின்னர் தன்னை ஆதரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார்.
அவர்கள் செய்யப்போது அவர்கள் ஒத்துளைப்பு கொடுத்து தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பு இவற்றை பார்த்தால் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்தடவையாக தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று புதிதாக தொடங்கப்போகின்றது” என்றார்.