யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் திருகோணமலை மாவட்டத்தில் 12 பேர், யாழ். மாவட்டத்தில் 09 பேர் உட்பட 52 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்றைய தினம் (ஜூலை-13) 711 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்கள் அருவிக்கு தெரிவித்தன.
குறித்த தவல்களின் அடிப்படையில்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 09 பேர்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 07 பேர் (32, 33, 66, 72 வயது ஆண்கள, 27, 63, 68 வயது பெண்கள்)
யாழ். போதனா வைத்தியசாலையில் – 02 பேர் (32 வயது பெண், 37 வயது ஆண்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் – 06 பேர்
மல்லாவி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் – 04 பேர் (49 வயது ஆண், 12, 16, 45 வயது பெண்கள்)
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் – ஒருவர் (39 வயது பெண்)
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் – ஒருவர் (77 வயது ஆண்)
கிளிநொச்சி மாவட்டத்தில் – 03 பேர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் – 02 பேர் (22, 50 வயது பெணஒ;கள்)
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர் (23 வயது ஆண்)
மன்னார் மாவட்டத்தில் – 03 பேர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் – 03 பேர் (51 வயது ஆண், 28, 51 வயது பெண்கள்)
வவுனியா மாவட்டத்தில் – 02 பேர்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் – ஒருவர் (44 வயது ஆண்)
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர் (29 வயது ஆண்)
திருகோணமலை மாவட்டத்தில் – 12 பேர்
குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 10 பேர் (5 வயது – 59 வயதுக்கு உட்பட்டோர்)
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 02 பேர் (38, 43 வயது ஆண்கள்)
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் – 17 பேர்
பம்பைமடு கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் – 03 பேர் (4, 7, 9 வயது சிறுமிகள்)
இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் – 13 பேர் (பெண்கள் 13 பேர்)
வசாவிளான தனிமைப்படுத்தல் நிலையத்தில் – ஒருவர் (59 வயது பெண்)
இவ்வாறு வட மாகாணத்தில் 23 பேருக்கும், கிழக்கு மாகாணம் திருகோணமலையில் 12 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் 17 பேருக்கும் என 52 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.