நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குளிருடனான வானிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரு தினங்களில் 802 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 256 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைஆகிய தினங்களில் மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீரென உயிரிழந்துள்ளன.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி வடக்கு மாகாணத்தில் 358 மாடுகளும் 191 ஆடுகளும் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும் 34 எருமைகளும் 65 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
இதேவேளை
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், கரைதுறைப்பற்று போன்ற பிரதேசங்களில் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இதுவரை 800 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த கால்நடைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன