வடகொரியாவின் புதிய தலைவர் அறிவிப்பு?

You are currently viewing வடகொரியாவின் புதிய தலைவர் அறிவிப்பு?

வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன்னின் அரசியல் வாரிசாக அவரது சகோதரியை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நகர்வானது, வடகொரியாவின் அதி முக்கிய பொறுப்புக்கு கிம் யோ ஜாங் தெரிவாக உள்ளார் என்பதை உறுதி செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கிம் ஜாங்-ன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த காலகட்டத்தில், தற்போது கிம் யோ-வுக்கு அளிக்கப்பட்டுள்ள இதே பொறுப்பை கிம் ஜாங் வுன்னுக்கு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு வழங்கியிருந்தனர்.

கிம் குடும்பத்தின் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் வடகொரிய தேசிய அமைச்சரவை கூடி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

j

இதனால் கிம் ஜாங் மறைவுக்கு பின்னால், அடுத்த தலைவராக எவ்வித சட்டச் சிக்கலும் இன்றி கிம் யோ பொறுப்பேற்க முடியும்.

மட்டுமின்றி, கிம் ஜாங் மறைவுக்கு பின்னர், அரசியல் நெருக்கடியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற எவரேனும் முன்வராமல் தடுக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவில் அதி முக்கிய பொறுப்புக்கு வருபவர்களுக்கு துணை ஜனாதிபதி என்ற பொருள்படும் Dang Joong-ang என்ற பட்டம் அளிக்கப்படுகிறது.

இந்த பட்டம் வகிப்பவர்கள் சொல்வதும் சட்டமாக கருதப்படும் என்பதே சிறப்பு. Dang Joong-ang என்ற அதி முக்கிய பொறுப்புக்கு வரும் கிம் யோ, இனி கட்சி வட்டாரத்தில் முக்கிய பொறுப்புகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியாவின் அனைத்து அம்சங்களிலும் தமது ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார் கிம் யோ.

அமெரிக்க ஜனாதி டிரம்புடன் சந்திப்புக்கு வடகொரியா சார்பில் களமிறங்கியதும், சீனா ஜனாதிபதியை சந்திக்க சென்றதும்,

தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தமது அணியை உற்சாகப்படுத்த சென்றதுடன்,

டிரம்ப் உடனான இரண்டாவது கூட்டத்தை, பாதியில் ரத்து செய்து வெளியேற காரணமானதும் கிம் யோ என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கிம் ஜாங் தொடர்பில் சமீபத்தில் வெளியான அனைத்து குழப்பமான, உறுதியற்ற தகவல்களுக்கும் காரணம் கிம் யோ என்றே கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருக்க, உலக நாடுகள் மொத்தமும் கிம் ஜாங் வுன்னுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் பேச வைத்தவர் கிம் யோ என்றே கூறுகின்றனர்.

பகிர்ந்துகொள்ள