வடகொரியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த அமெரிக்கா மற்றும் தென் கொரியா!

You are currently viewing வடகொரியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த அமெரிக்கா மற்றும் தென் கொரியா!

வட கொரியாவின் சமீபத்திய தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவும், தென் கொரியாவும் ஜப்பான் கடலில் நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. கடந்த சில நாட்களாக ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் வட கொரியா பால்டிக் ஏவுகணை ஏவி தொடர்ந்து எச்சரிக்கை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வட கொரியாவின் அத்துமீறிய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவும் தென் கொரியாவும் ஜப்பான் கடலில் நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதல் இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இராணுவ கூட்டு பயிற்சியில் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இது நாட்டின் திறன்களை நிரூபிக்கும் முயற்சி மற்றும் வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களை தடுக்கும் என்று கூட்டுப் படை தலைவர் (JCS) தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜப்பான் மீது வட கொரியா ஒரு இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்திய ஒரு நாளுக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் இந்த ஏவுகணை பயிற்சி அரங்கேறியுள்ளது.

வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜப்பான் அரசாங்கம் மக்களை உடனடியாக பாதுகாப்பான தங்குமிடம் பெற அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply