வடகொரியா 100,000 துருப்புகளை ரஷ்யாவுக்கு உதவ நடவடிக்கை!

You are currently viewing வடகொரியா 100,000 துருப்புகளை ரஷ்யாவுக்கு உதவ நடவடிக்கை!

புடின் மற்றும் கிம் இருவரும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தினால், வடகொரியா ஒரு லட்சம் துருப்புகளை உதவ அனுப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 நாடுகளால் நடத்தப்பட்ட பகுப்பாய்வு மூலம், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான உறவு சுமூகமாக உலக அரங்கில் உள்ளது. இது குறைய வாய்ப்பில்லாத போக்கு என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இதற்கு சான்றாக, ஏற்கனவே ரஷ்யாவின் ஆயுதப் படைகளுடன் வடகொரியப் படைகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகிய தலைவர்கள் இருவரும், தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தினால், உக்ரைன் மீதான நடவடிக்கைக்கு வடகொரியா 100,000 துருப்புகளை ரஷ்யாவுக்கு உதவ அனுப்பலாம்.

குளிர்காலத்திற்கு முன்பாக புடினின் ஏவுகணைகள், உக்ரைனின் எரிசக்தி கட்டத்தை தாக்கி முடக்கிய பின்னர், வடகொரியா 100,000 வீரர்களை ரஷ்யாவுக்கு ஆதரவாக அனுப்பும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ராணுவ ஆதரவு நிலைநிறுத்தப்பட்டால் உக்ரேனிய முன்வரிசைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழலும் துருப்புகளுடன் இது நீண்ட காலத்திற்கு நிகழும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றிரவு, உக்ரைனின் மின்சார அமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது, ரஷ்ய ராணுவம் இதுவரை இல்லாத பாரிய தாக்குதலை முன்னெடுத்ததைத் தொடர்ந்து இது வருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply