வடக்கில் நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 192 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 44 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கிலும் அதிகரிக்கிறது தொற்று! – நேற்றும் 47 பேர்!
