வடக்கில் எச்.ஐ.வி தொற்றால் 125 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்!

You are currently viewing வடக்கில் எச்.ஐ.வி தொற்றால் 125 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்!

வடக்கு மாகாணத்தில் 125 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் மன்னார் மாவட்டத்த்தில் 9 தொற்றாளர்கள் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கான சிகிச்சைகள் எமது கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் பிரிவு பதில் வைத்திய நிபுணர் வைத்தியர் சலினி நாணயகார தெரிவித்தார்.

சர்வதேச எயிட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி விசேட விழிர்ப்புணர்வு கலந்துரையாடல் நேற்று மாவட்ட பிராந்திய சகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திபின் போதே அவர் இத் தகவலை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

15 வயது தொடக்கம் 24 வயதுடைக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் அதிகமாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தரவுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் 2019 ஆம் ஆண்டு வரை 439 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 15 வயது தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்ட 54 இளைஞர் யுவதிகள் எச்.ஐ.வி தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் தற்போது வரை 125 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சைகள் எமது கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நோயை தடுப்பது மக்கள் அனைவருடைய கடமையாகும். ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து சுகாதார துறைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்த நோயில் இருந்து வெற்றி கொள்ள முடியும்.

இலங்கை முழுவதிலும் 34 பாலியல் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி தொற்றுக்கான தாக்கம் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்றார்.

பகிர்ந்துகொள்ள