வட மாகாண தடுப்பூசித் தரவுகளின் பிரகாரம் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 67.04 வீதம் பேர் நேற்று வரை குறைந்தது ஒரு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர்.
மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை 657,547 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவா்களில் 440,809 பேர் நேற்றுவரை தடுப்பூசி பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி பெறத் தகுதிபெற்ற 30 வயதுக்கு மேற்பட்ட 344,766 பேரில் நேற்று வரை 229,982 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். இந்த இந்த வயதுப் பிரிவினரில் 66.71 வீதமாகும்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்ட 72,000 பேரில் 46,431 பேர் நேற்று வரை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது 30 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 64.49 வீதமாகும்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் 30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறத் தகுதிபெற்ற 65,000 பேர் உள்ள நிலையில் நேற்று வரை 43,766 பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். இது இந்த வயதுப் பிரிவினரில் 67.33 வீதமாகும்.
மன்னார்
மன்னாரில் 30 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் 77,781 ஆக பதிவாகியுள்ள நிலையில் இவகளில் 52,532 பேர் தடுப்பூசி பெற்றனர். இது 30 வயதுக்கு மேற்பட்ட மாவட்ட மக்கள் தொகையில் 67.54 வீதமாகும்.
வவுனியா
வவுனியாவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,000 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 68,098 பேர் நேற்று வரை தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். இது இந்த வயதுப் பிரிவினரில் 69.49 வீதமாகும்.