வடக்கில் போதைப்பொருள் திணிப்புக்கு பின்னால் காவல்துறையும் இராணுவத்தினரும்!

You are currently viewing வடக்கில் போதைப்பொருள் திணிப்புக்கு பின்னால் காவல்துறையும் இராணுவத்தினரும்!

வடக்கில் திட்டமிட்ட போதைப்பொருள் திணிப்புக்கு பின்னால் காவல்துறையும் இராணுவத்தினரும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இராணுவத்தில் உள்ள 80 சதவீதமான இராணுவ வீரர்கள் வடக்கிலேயே குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருந்தும் கூட எவ்வாறு அங்கு போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

வடக்கு மாகாணத்தில் விசர்நாய் கடி, பாம்புக்கடி ஆகியவற்றுக்கான மருந்து பொருட்கள் பெருமளவில் தட்டுப்பாடாக உள்ளது. வட மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலையில் இயங்கமுடியாத நிலையே காணப்படுகிறது என்று எனக்கு தெரியாது. தென்மாகாணத்திற்கு சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் தேவை எனக்கு இருந்தது இல்லை எனவும் கூறினார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் புகுத்தப்படுகிறது , இதனால் அங்குள்ள இளைஞர்கள் பலரும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். எனவே இவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கான புனர்வாழ்வு நிலையங்களில் அங்கு இல்லை. எனவே அவற்றை விரைவாக அமைத்துத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply