வட மாகாணத்தில் நேற்று 189 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – 65, கிளிநொச்சி -56, முல்லைத்தீவு -29, வவுனியா – 24 மற்றும் மன்னாரில் 15 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – 85, திருகோணமலை 27 மற்றும் அம்பாறை – 27 பேர் என 139 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை சிறீலங்காவில் மிக அதிகமாக கம்பஹாவில் 648 பேரும் கொழும்பில் 630 பேரும் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், களுத்துறை – 409, பதுளை -187, காலி -185, மாத்தறை -141, கேகாலை – 119 மற்றும் குருநாகலை மாவட்டத்தில் 111 பேருக்கு தொற்று உறுதியானது.
சிறீலங்காவில் முழுவதும் நேற்று மொத்தம் 3,297 தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். இவா்களுடன் இலங்கையில் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 195,843 ஆக அதிகரித்துள்ளது எனவும் கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.