யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 45 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 579 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள் 45 பேருக்கும்,
வெள்ளாமுள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையத்தினைச் சேர்ந்த 09 பேருக்கும், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கும், காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 41 பேர்
யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர்,
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
யா்ழ.போதனா வைத்தியசாலையில் 03 பேர்,
யாழ்.சிறைச்சாலையில் ஒருவர்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
<முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேர்
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 02 பேர்,
மன்னார் மாவட்டத்தில் 02
மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன் தினம் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.
இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின் தகனம் செய்யப்பட்டன.
மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.அதன்படி வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் இருதய நோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
மூவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல் களின் அடிப்படையில் மின் தகனம் செய்யப்படவுள்ளன.