பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.
சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை,வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சட்டத்தைரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டன.
.jpg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)