வடக்கு நைஜீரியாவிலுள்ள ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் கனரக வாகனம் ஒன்று வெடிப்புக்குள்ளாகியதில் 95 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரம்பிய கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்துள்ளது.
இதன்போது, அந்த வாகனத்தில் இருந்து கசிந்து வெளியேறிய எரிபொருளை பெருமளவு மக்கள் சேகரித்து கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்பாராதவிமாக அந்த கனரக வாகனம் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, விபத்தில் சிக்கி 95 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிகரிப்பு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.