வடக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர். என்று ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இனவெறி பிடித்த ஜேவியின் பொதுச்செயலாளர் செத்துப்போன 13ம் திருத்த சட்டத்திற்கே இப்படி பேசும் போது எப்படி தமிழ் மக்களின் உரிமைகளை தருவார்கள்.
வடகிழக்கில் தமிழ் மக்கள் இந்த இனவாத கட்சிகளுக்கு வாக்குப்போட்டால் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதையெல்லாம் அநுராவுக்கு சாமரம் வீசும் அரசியல் குஞ்சுகளும் அரசியல் வரலாறே தெரியாது டக்கிளஸ் கருணா பிள்ளையான் போன்று வாழையடி வாழையாக இனவழிப்பாளிகளுக்கு சேவகம் செய்து அடிமைநிலை சிந்தனையை ஊக்கிவிக்க முனையும் அறிவீலிகளும் சிந்திக்கவேண்டும்.
சிங்கள இனவாதிகள் போடும் எலும்புத்துண்டை சுவைக்கபோகின்றீர்களா? அல்லது நீங்களே சொந்தக்காலில் நிற்க முனையப்போகின்றீர்களா? என்பதை ஆளமாக ஆய்வுசெய்யவேண்டும்.
நாம் சிங்களத்திற்கு வாக்கு போட்டால் கை கட்டி முதுகு வளைந்து சேவகம் செய்வதை தவிர, தமிழனுக்கு எந்த விடிவும் கிடைக்கப்போவதில்லை, ஒருநாள் சோற்றுக்காக உரிமையை இழந்து காலம் காலமாக அடிமையாக வாழ்வதை விட, உரிமைக்காக போராடி சாவதே மேல் என்ற உயர்ந்த சிந்தனையே எமது இனத்தின் நிரத்தர தீர்வுக்கு வழி சமைக்கும்.
போராடாத இனமும் ஓடாத மானும் வாழ்ந்ததாக வரலாறில்லை இதை உணராது சலுகை அரசியலுக்குள் திளைக்கலாம் எனும் கோளைச்சிந்தனையில் இனத்தின் விடுலைச்சிந்தனையை தொலைக்காதே தமிழா வாழும் வரை போராடு தோள் இறக்கி துவளாதே காலம் வரும் வரை கால்கள் சோராது பயணிப்போம்.