வடமகாணத்தில் கோரானா எச்சரிக்கை!

You are currently viewing வடமகாணத்தில் கோரானா எச்சரிக்கை!

சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்திவரும் «கொரோனா» வைரஸ் தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எச்சரிக்கையாகவும் விழிப்போடும் இருக்கவேண்டும் என மருத்துவர் சி. யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற சுவாசத் தொற்று நோய் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவுகின்றது.

இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் மிகவும் விழிப்பாக உள்ளது. இன்னும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை.

பன்றிக் காய்ச்சல், பறவைக் பாய்ச்சல் என்பது போல் இந்த வைரஸ் தொற்றை பாம்புக் காய்ச்சல் என நாம் கூறலாம். நாக பாம்பிலிருந்து இந்த வைரஸ் மனிதனுக்கு சுவாசம் ஊடாகப் பரவி தற்போது விகாரமடைந்துள்ளது வேகமாகத் தொற்றிவருகிறது.

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளனர்.

இந்தத் தொற்று நோயின் அறிகுறிகளாக சாதாரண தடிமன், தொண்டை நோ மற்றும் இருமல் இருக்கின்றன. இந்த தொற்றுக்குள்ளாகியவர்கள் சுவாசப் பாதிப்பு ஏற்பட்டு 10 பேரில் நால்வர் இறக்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொற்றுக்கு மருந்துகள் இல்லை. அதனால் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சீனாவில் மக்கள் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்த நோய்த் தொற்று அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்று இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம். எனவே சுகாதார அதிகாரிகள், சிவில் அதிகாரிகள், பொதுமக்கள் போதிய விழிப்போடு இருக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் வைத்தியசாலை முடங்கும் நிலை ஏற்படலாம். எனவே மயிலிட்டியுள்ள காசநோய் வைத்தியசாலையை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் சீரமைத்து வழங்கினால், அவசர நிலையை சமாளிக்க முடியும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். இந்தத் தொற்றுத் தொடர்பில் விழிப்போடு செயற்படுவதை நாம் தற்பொதே முன்னெடுத்துள்ளோம்- என்றார்.

இதேவேளை அண்டை நாடான சிறீலங்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படும் சீன பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள