வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம்!

You are currently viewing வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.

குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.

குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவலிங்கம் காணப்படும் இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply