வல்லைப் பகுதியில் இன்று இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் உயிரிழந்துள்ளார் .
யாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்து சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது
படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன் வயது 21 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்