வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை ஒக்ரோபர் மாதத்தை விடவும் நவம்பர் மாதம் அதிகரித்திருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 2, 661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதேவேளை நவம்பர் மாதத்தில் மட்டும் 3,049 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் 71 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். இருப்பினும் நவம்பர் மாதத்தில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக குறைவடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் அதிகப்படியாக 842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபபட்டுள்ளனர். இதையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 825 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வவுனியாவில் 713 பேரும், மன்னாரில் 540 பேரும், மற்றும் முல்லைத்தீவில் 129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வடமாகாணத்தில் கடந்த (30) அன்று 75 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.
இதேவேளை, யாழில் 30 பேரும், கிளிநொச்சியில் 8 பேரும், வவுனியாவில் மற்றும் மன்னாரில் தலா 5 பேருக்கும், முல்லைத்தீவில் ஒருவர் என 49 பேருக்கு கொரோனா தொற்று கடந்த நவம்பர் மாதத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.