சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடந்து வரும் சண்டை காரணமாக கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல் காரணமாக அந்த நாடு பெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் 2வது பெரிய நகரமான இட்லிப் நகரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்துள்ளது. இதனால் கடந்த டிசம்பர் 12 முதல் 25 வரை தெற்கு இட்லிப்பில் உள்ள மராட் அல்-நுமன் பகுதியில் மக்கள் வெளியேறி உள்ளனர். கிட்டத்தட்ட அந்த பகுதியே காலியாகி உள்ளது.